‘சடாரி’ முதல் ‘அச்சம் என்பது தேவையடா’ என்பது முடிய, 11 சிறுகதைகளின் தொகுப்பு நுால். முதல் கதை குறுநாவலாக உள்ளது. மீதம் உள்ளவை சிறுகதைகள். ஒவ்வொரு கதையும் ஒரு கருத்தை உணர்த்தும் வகையில் படைக்கப்பட்டுள்ளன.
தேர்தல் நேரத்தில் பணப் பட்டுவாடா நடைபெறாமல் தடுப்பதற்கு தேர்தல் ஆணையம் எடுக்கும் முன் முயற்சிகளையும், நடவடிக்கைகளையும், ‘அச்சமென்பது தேவையடா’ என்னும் கதையில் எழுதியுள்ளார். கிராம வளர்ச்சியை, ‘குறையொன்றும் இல்லை’ என்னும் கதையில் உணர்த்தியுள்ளார்.
சிறுகதைகளுக்கு தலைப்பு கொடுப்பதில் சிரத்தையுடன் செயல்பட்டுள்ளார். இலக்கியத் தாக்கத்தை ஏற்படுத்தும் முயற்சியில் வெற்றி கிடைத்துள்ளது. குறையொன்றுமில்லை, புணர்ச்சி பழகுதல் வேண்டா, தவறுகள் செய்தவர்கள் அழுகிறார்கள் என்ற தலைப்புகள், திருக்குறள் மற்றும் திரைப்படப் பாடல்களை நினைவு படுத்துவதை தவிர்க்க இயலாது. பயணத்தை பயனுள்ளதாக்கும் சிறுகதைகளின் தொகுப்பு நுால்.
– ராஜா