சக்தி ஒரு அறிமுகம் துவங்கி, 20 தலைப்புகளில் வாராஹியின் அவதாரம், வாராஹி வழிபாடு, வாராஹி வழிபாட்டின் பலன், சப்த கன்னியர், வாராஹியின் கதை போன்ற தலைப்புகளில் அமைக்கப்பட்டுள்ள நுால்.
சப்த கன்னியருள் வாராஹியும் ஒருவர். சைவம், வைணவம், சாக்தம் என்னும் மும்மதங்களிலும் வாராஹி வழிபாடு ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. ஸ்ரீவாராஹி மிகுந்த சக்தியுடையவள். வாராஹியின் பல வடிவங்களைப் பற்றி பேசுகிறது. தேவையான இடங்களில் பொருத்தமான படங்கள் அமைந்துள்ளன.
ஸ்ரீவாராஹி எந்தெந்த திருத்தலங்களில் எழுந்தருளி அருள்கிறாள் என்பதை விளக்குகிறது. திருப்பதி மலையில் ஒரு ஆதி வராகர் உள்ளார். வேண்டியவர்களுக்கு வேண்டியதை நல்கும் திருப்பதி வெங்கடேசப் பெருமாள். அவரே ஆதிவராகப் பெருமாளை வணங்கி தனியாக வேங்கட மலையில் எழுந்தருளினார் என்று புராணங்கள் கூறும் தகவலை பதிவு செய்துள்ளது. ஆதி வராகரை வழிபட்டு தான் திருவேங்கடவனை வழிபட வேண்டும். செய்த பாவங்கள் தீர ஸ்ரீவாராஹிக்கு பரிகாரம் செய்யும் முறையை தருகிறது. வாராஹியைப் பற்றி அனைத்துத் தகவல்களையும் அறிந்து கொள்ள பெரிதும் உதவும் நுால்.
– பேராசிரியர் இரா.நாராயணன்