எளிய நடையில் சின்னஞ்சிறிய கதைகள், தர்மத்தை போதிக்கின்றன. அஞ்சுவதும், கெஞ்சுவதும், அடிபணிவதும் முதுமைக்கு அழகல்ல. முதுமை வந்துவிட்டதே என்று அஞ்சி தாழ்த்திக் கொள்ள வேண்டாம் என்ற போதனை மிக அருமையாக உள்ளது.
தாய் சொல்லும் வார்த்தை, ‘உண்மையான அன்பு இல்லாத மகன், மருமகளிடம் போராடி அதை பெற முடியாது’ என உள்ளது. உண்மை தான். அதனால் தான் அனாதை விடுதிகள் பெருகிவிட்டன. அந்த வயதான பெண்கள் கூடி புரட்சி செய்கின்றனர். பெற்றவரை ஆதரிக்காத பிள்ளைகளுக்கு வீடு கொடுக்கக் கூடாது என்பது அந்த போராட்டம்.
தினசரிகளில் படிக்கும் செய்தி தான். சொத்தைப் பறித்து பெற்றவரை விரட்டினால், பெற்றவர் நீதிமன்றத்துக்குப் போய் உரிமையை மீட்கின்றனர். அதை சூடாக எழுதியிருக்கிறார். முதியோருக்கு நம்பிக்கை தரும் கதைகள் கொண்ட தொகுப்பு நுால்.
– சீத்தலைச் சாத்தன்