வழிகாட்டும் வாழ்வியல் தத்துவங்களையும், அறிவுரைகளையும் கூறும் நுால். எளிமையாக புரிந்து கொள்ளும் வகையில் உரை எழுதப்பட்டுள்ளது. வாழ்க்கையில் ஒவ்வொரு பொருளும் தேவைப்படும் நேரத்தில் உதவ வேண்டும். அவ்வாறு உதவாவிட்டால் எந்த பயனும் இருக்காது. மனிதர்களின் தேவை பூர்த்தியாகி விட்டால், அதற்கு காரணமானவர்களை மறந்து விடுவர்.
பணம், பொருள் சேர்ப்பதில் கவனம் செலுத்துவோர், அறச்செயல்களை செய்வதில்லை போன்ற கருத்துக்களை எடுத்துக்காட்டுகளுடன் விளக்குகிறது. வாழ்க்கை தத்துவங்களை அறிந்து கொள்ள வாசிக்க வேண்டிய நீதி நுால்.
–
முகில் குமரன்