இயற்கை வேளாண்மை குறித்து வரலாற்று பின்புலத்துடன் எழுதப்பட்டுள்ள நுால். நஞ்சற்ற உணவு உற்பத்தியை முன் வைக்கிறது. இந்த நுால், 31 அத்தியாயங்கள் கொண்டது. இயற்கை வேளாண் உற்பத்தி குறித்த கருத்துக்கள் தொகுக்கப்பட்டுள்ளன. மனித சமுதாயத்தின் அங்கம் இயற்கை வேளாண்மை என்ற தலைப்புடன் துவங்குகிறது. அடுத்து, நிலத்தை மேலாண்மை செய்யும் விதம் குறித்த விபரங்களை தருகிறது.
இந்தியாவில் வேளாண்மை துறை சந்திக்கும் பிரச்னைகள் பற்றியும் அலசுகிறது. இயற்கை உரம் தயாரிப்பு பற்றிய விபரங்களை கொண்டுள்ளது. கால்நடை தீவனத்தின் முக்கியத்துவம் பற்றியும் அலசுகிறது.
பசுமை புரட்சிக்கு பின் விவசாயம் என்ற அத்தியாயம், இந்திய வேளாண்மையின் பாதிப்பு குறித்து பேசுகிறது. இந்திய விவசாயத்தை புரிந்து கொள்ள உதவும் நுால்.
–
ஒளி