கானா பாடலுக்கு ஓசை நயம் தான் முக்கியம். அதற்கு முக்கியத்துவம் கொடுத்து எழுதப்பட்டுள்ள 34 பாடல்களின் தொகுப்பு நுால். பெரும்பாலும் கிராமிய பாடல்கள் போல் உள்ளன. ‘பிள்ளைகளைப் படிக்க வையடா... அட நல்லவரா நடக்கச் செய்யடா...’ என்பது போல் பல பாடல்கள் மனம் கவரும் வண்ணம் உள்ளன.
அதிர்வேட்டாக, ‘கொள்ளையடிச்சவன் குபேரன் ஆனான்...’ என்பது போல் சமூக நெறி பேசும் பாடல்களும் உள்ளன. எத்தனையோ பேர் சாராயக்கடையை மூடச் சொன்னது போல இவரும் கானா பாட்டில் சொல்லுகிறார். ஒலிநயமும், கருத்து நயமும் நிறைந்த பாடல்கள் கொண்ட நுால்.
– சீத்தலைச் சாத்தன்