அன்பே சிவம், அன்பே ஒழுக்கம் என்று அன்பை பல நிலைகளில் வலியுறுத்தும் நுால். பிறரை நேசிக்க, உதவிட, தர்மம் செய்ய, நன்மை செய்ய அடிப்படையானது. வள்ளுவர் துவங்கி, பல நாட்டு அறிஞர்கள், தத்துவ ஞானிகள் வலியுறுத்தும் அற்புதச் சிந்தனைகள் இடம் பெற்றுள்ளன. அன்பும், பரிவும் கொண்ட குடும்பமே உலகில் மகிழ்ச்சி நிறைந்தது என்ற கருத்தை, 71 தலைப்புகளில் உள்ளடக்கியுள்ளது.
இயற்கை பேரிடர் மற்றும் ஆபத்து நிலைமைகளில் ஜாதி, மத, பேதம் இன்றி அனைவரும் மனிதர்கள் என்ற உணர்வுடன் அன்பு, உடல் உழைப்பு, பொருளுதவி மற்றும் பண உதவி வாயிலாக வெளிப்படுத்துவதை கூறுகிறது. அன்பை தெளிவாக விளக்கும் நுால்.
– வி.விஷ்வா