தமிழக பண்பாட்டு நகர்வுகள், நாகரிக வளர்ச்சிகள், மொழி வரலாறு, தொன்மைக்கால வரலாறு, திராவிட இயக்க வரலாற்றை தொகுத்து தரும் நுால். தமிழக மரபுச் சுவடுகள்,தென்குமரி புதைபட்ட வரலாறு, சிந்து சமவெளி நாகரிகம், தொல்லியல் ஆய்வுத் தடயங்கள், வரலாற்று வெளிச்சங்கள், தொல்தமிழகத்தின் கலைகள், நாணயங்கள், அகவாழ்க்கைச் சூழல்கள், வீர விளையாட்டுகள், பண்பாட்டுக் கூறுகள், சமய வளர்ச்சிகள், முடிமன்னர் விபரங்களை அறிய உதவுகிறது.
குமரி மற்றும் லெமூரியா கண்ட வேறுபாடு, மொழிகளின் தோற்றம், தமிழர் தோற்றமும் பரவலும், தமிழக தொல்லியல் ஆய்வுகள், பண்டைய சமூக வாழ்வியல், சமயப்பூசல்கள் விறுவிறுப்பாகத் தரப்பட்டுள்ளன. பாண்டியர் வரலாறு, பிற்கால முற்காலச் சோழர் வரலாறு, சோழ மண்டலக் கடற்கரை மற்றும் அதன் உள்ளமைந்த நாடுகள், சேரர் வரலாறுகள் போன்றவற்றை கண்முன் நிறுத்துகின்றன. தமிழர் வரலாற்றை பல கோணங்களில் தெரிய உதவும் நுால்.
– கவிஞர் மெய்ஞானி பிரபாகரபாபு