பல்வேறு சுவையில் எழுதப்பட்டுள்ள சிறுகதைகளின் தொகுப்பு நுால். இதில், ‘அகதீ’ என்ற கதை நெஞ்சை சுடுகிறது. கதையாசிரியர் சினிமா துறையில் இருப்பதால், சினிமா பாஷை நிறையவே உள்ளது. அந்தத் துறையில் நடக்கும் தகிடுதத்தங்கள் படம் பிடித்து காட்டப்படுகின்றன.
‘கூரை பள்ளிக்குள் வாத்தியார்’ ஒரு அற்புத படைப்பு. மாணவர்களைப் படிக்க வைக்க அவர் பாடம் சொல்லித் தரும் விதமே தனி. ‘மனிதம் வளர்ப்போம்’ சிறுகதையில் நாட்டாமையின் குணமே அருமையாக உள்ளது. உறவுகள் பிரிய நேரலாம். ஆனால், அழிய நேரக்கூடாது என்ற கொள்கை பேசப்பட்டுள்ளது.
பறவைகள் பல கோடி மரங்களை விதைத்த விவசாயிகள் என்ற நடைமுறை உண்மையைச் சொல்லும் நல்ல மனிதர். அவருக்கு கோபம் வந்தபோது மனிதர்களை வெட்டவில்லை; வளர்த்த வாழைத்தோட்டத்தையே வெட்டுகிறார். அது திரும்ப துளிர்த்து விடும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தும் நுால்.
– சீத்தலைச் சாத்தன்