திருமந்திரத்தில் மனிதவள மேம்பாட்டுக் கூறுகள் பற்றி ஆய்ந்து உரைக்கும் நுால். ஐந்து இயல்களாகப் பிரிக்கப்பட்டுள்ள ஆய்வில், தமிழிலக்கியத் தளத்தில் திருமந்திரத்தின் தனித்தன்மை, சிறப்பியல்புகள், திருமூலரின் மெய்ஞான மரபு போன்றவை விளக்கப்பட்டு உள்ளன.
திருமந்திரத்தில் உடல்நலம், மனநலம், ஆன்மநேயம் மற்றும் சமூக நலக் கருத்துக்களை ஆய்வு செய்து, திருமூலர் நெறிமுறைகள் தனித்தனி இயல்களில் விவரிக்கப்பட்டுள்ளன. எண்ணத்தை ஒருநிலைப்படுத்துதல், சினம் விடுத்தல், குற்றம் தவிர்த்தல், கவலை குறைத்தல், பிறரை வாழ்வித்தல் எனப் பல காரணிகள் மனநிறைவைத் தந்து, மனித வளத்தைச் சிதைக்காமல் காக்கின்றன என்று சுட்டியுள்ளது. உடல், மன, ஆன்ம நலங்கள் வாயிலாக மனிதவள மேம்பாடு முன்வைக்கப்பட்டுள்ளது. ஆன்மநேயத்தை விளக்கும் ஆய்வு நுால்.
– கவிஞர் மெய்ஞானி பிரபாகரபாபு