நெல் ரகங்களை பாதுகாக்கும் விதமாக தகவல்களை சேகரித்து எழுதப்பட்டுள்ள நுால். பாரம்பரியமாக சாகுபடி செய்யப்பட்ட பல்வேறு நெல் ரகங்கள் பற்றிய செய்திகளைக் கொண்டுள்ளது.
சிறு சிறு தலைப்புகளில் தகவல்களைக் கொண்டு அமைந்துள்ளது. நெல் சாகுபடி நுட்பங்கள் குறித்த விபரங்களும் தரப்பட்டு உள்ளன. பாரம்பரியமாக பயன்படுத்திய நெல் ரகங்கள், அவற்றின் சிறப்புகள், அழிந்து வரும் நெல் ரகங்கள், அவற்றை பாதுகாக்க எடுக்கப்பட்டு வரும் முயற்சிகள், அது தொடர்பான கருத்தரங்கு பற்றிய தகவல்களையும் கொண்டு உள்ளது.
அழிந்து வரும் நெல் ரகங்கள் பற்றிய பட்டியல் தரப்பட்டுள்ளது. எந்த அரிசி ரகம் என்ன வகை ருசியை கொண்டிருக்கும் என்ற தகவலையும் உள்ளடக்கியுள்ளது. முக்கிய உணவுப் பொருளான நெல் ரகங்களை பாதுகாக்கும் தகவல்களைக் கொண்ட நுால். இயற்கை விவசாயத்தில் ஆர்வம் காட்டுவோருக்கு உகந்தது.
– மலர்