மழைக்காலத்தில் நுரையுடன் பொங்கி வரும் நதியின் நீரோட்டம் போன்ற அழகான கவிதை நடையிலான நுால். சின்ன சின்ன வரிகளில் எழுதிய கவிதை பூங்கொத்தாக உள்ளது.
அப்பாவைப் பற்றி மகன் பாடிய நினைவு குறிப்புகளாக உள்ளன. சிரிப்பைத் துாண்டினால் பேச்சாளரின் வருமானம் அதிகரிக்கும். ஆனால், சிந்தனையை விதைப்பது தான் நல்லது என்றும் சொல்லிக் கொடுத்திருக்கிறார்.
நாளை என்பது முட்டாள்களின் மொழி, சோம்பேறிகளின் முகவரி என்பது அழகான சொல்லாட்சி. புதிய பாதை காட்டும் புத்தகம். படித்தால் மகனை வளர்க்க, வாழ வைக்க ஒவ்வொரு தந்தையும் என்ன பாடுபட்டு இருப்பர் என்பது புரியும். புரிய வேண்டும்.
– சீத்தலைச் சாத்தன்