வேதங்களில் இயற்கை தெய்வங்களை போற்றும் வேள்வி, அவற்றால் ஏற்படும் பலன்கள், வேத விளக்கங்கள் தரப்பட்டுள்ள நுால். இயற்கையை தரிசிப்பதால் உண்டாகும் அமைதி, ஆனந்தம் பூரணமானது. இயற்கையோடு இணைந்த வாழ்வு நிறைவு உடையதாகும் என்பதை, கிரேக்க ஞானி எபிகுரஸ், ஜென் தத்துவத்தைப் போதித்தவர்கள், கபீர்தாசர், வள்ளலார், சுவாமி விவேகானந்தர், கவிஞர்கள் வில்லியம் வேர்ட்ஸ்வொர்த், தாகூர், பாரதி வழி நின்று கூறப்பட்டுள்ளது.
பிரபஞ்ச தியானத்தால் அடைந்த வெற்றியை கூறுகிறது. இயற்கை வழிபாட்டின் உன்னதங்களைப் பேசும் நுால்.
– புலவர் சு.மதியழகன்