சதுரகிரி சித்தர்களைப் பற்றி எழுதப்பட்டுள்ள நுால். இந்த மலைக்கு வரும் பக்தர்களுக்கு வழிகாட்டியாக வந்து, மகாலிங்கரை தரிசிக்கச் செய்வார் சித்தர் என பதிவு செய்துள்ளது. சதுரகிரி பகுதியில் விலங்குகள் நடமாட்டம் அதிகம். இதனால், அந்த பகுதி வனத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. வனத்துறை அனுமதிக்கும் நாட்களில் மட்டும், அங்கு சென்று சுவாமி தரிசனம் செய்ய முடியும்.
அந்த மலையில் அத்திரி மகரிஷியின் அருந்தவ பூமி, சஞ்சீவி மூலிகைகள் இருக்கும் இடம், சித்தர்களோடு சித்தராய் சிவபெருமான் சுற்றித் திரிந்த தலம் என சித்தர் மலையின் சிறப்பைப் பேசுகிறது. சதுரகிரிக்குச் சென்று வந்தவர்களின் அனுபவங்கள் பதியப்பட்டுள்ளன. அங்கு சித்தர்களை ஜோதி வடிவில் கண்டு தரிசித்துள்ளதாக கூறியுள்ளனர். அந்த பயணங்களை அனுபவத்துடன் தரும் நுால்.
– பேராசிரியர் இரா.நாராயணன்