உண்மையான மனித வடிவம் என்பது நிர்வாணமே. மனித குலம் இந்தக் கோலத்தில் தான் உலகத்திற்குள் நுழைகிறது. அதே போல் இந்தக் கோலத்தில் தான் இந்த உலகத்தை விட்டு வெளியேறுகிறோம் போன்ற தத்துவங்களை கொண்டுள்ள நுால்.
மொத்தம் 14 தலைப்புகளை கொண்டுள்ளது. காதல், வெறுப்பு, பொறாமை மற்றும் தற்பெருமை போன்ற உணர்ச்சிகளுக்கு அப்பாற்பட்டவர்கள் அகோரிகள். நோய்களை குணமாக்கும் சக்தியையும் பெற்றிருக்கின்றனர் என்கிறது.
நோயாளி உடலில் இருந்து மாசுக்களை நீக்கி, மீண்டும் பழைய ஆரோக்கியமான நிலைக்குக் கொண்டு வரும் சக்தியை அகோரிகள் பெற்றிருப்பதாக பதிவு செய்கிறது. இதற்கும், மாய வித்தைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று குறிப்பிடுகிறது. ஐயங்களைப் போக்குவதற்கு துாண்டுகோலாக அமையும் நுால்.
– முனைவர் இரா.பன்னிருகைவடிவேலன்