பெண் விடுதலை பற்றி பேசும் சிறுகதைகளின் தொகுப்பு நுால். மொத்தம், 10 தலைப்புகளில் பெண் மனங்களை பேசுகிறது. நாட்டாமையாக ஆண் தான் இருப்பர். இங்கு, ‘பஞ்சாயத்து தீர்ப்பை மாத்திச் சொல்லு’ கதையில் நாட்டாமையாக இருக்கிறார் ஒரு பெண்.
கணவர் இறந்த பின், பெண் பொட்டு, பூ வைப்பதை யார் முடிவு செய்ய வேண்டும் என்பதற்கு புரட்சிகர தீர்ப்பளிக்கிறார். திருமணம் என்ன செய்து விடும் என்பதை, ‘பெண்ணடிமை’ கதை உணர்த்துகிறது. விதவை பெண்ணை தனிமைப்படுத்த, அவள் மகனை துாண்டிவிடும் உறவுகளை, ‘உறவுகள் பலவிதம்’ கதை சாடுகிறது.
பெண்ணை மையப்படுத்தி நடப்புகளை பேசுகின்றன கதைகள். பிற்போக்கு பேச்சும், செயலும், பெண்களை பின்னோக்கி தள்ளுவதை உணர்த்தும் நுால்.
– டி.எஸ்.ராயன்