திரைப்படக் கலைஞர்கள், சமூக முன்னேற்றத்திற்கு ஆற்றிய பணிகளையும், இறை உணர்வு பற்றியும் விவரித்துள்ள கட்டுரைகளின் தொகுப்பு நுால். பொய்ம்மையின் வேகத்தோடு உண்மை போட்டி போட முடியாவிட்டாலும், புறந்தள்ளப்படுவதில்லை என பதிவு செய்துள்ளது.
இனிய, இதமான சொற்களை பயன்படுத்தும்போது தான், கணவன் – மனைவி உறவு நிலை உறுதிப்படும். கோபத்தின் உச்சம் கொலையில் முடியும். வெட்கம், அவமானம் இரண்டும் பொருளாதார ஏற்றத்தாழ்வு சார்ந்ததல்ல; இவை ஏற்படாதபடி காத்துக்கொள்ள வேண்டும் என வலியுறுத்துகிறது.
மக்களோடு இணைந்து, நடிகர் என்ற நிலையை அடைந்தவரால் மட்டுமே, வெற்றி பெற முடிந்தது போன்ற கருத்துக்களை கொண்டுள்ளது. பொருட்செறிவு மிக்க கட்டுரைகள் அடங்கிய நுால்.
– புலவர் சு.மதியழகன்