நதி ஓட்டம் போல் நடையுள்ள நவீன நாவல். இளைஞனின் பெண் பார்க்கும் படலம் நாவலாக மலர்ந்துள்ளது. இளம் பெண்களின் மனநிலை, எதிர்பார்ப்புகள், பெற்றவர்களின் மன ஓட்டம் என பெண் பார்க்கும் படலத்தை மையப்படுத்தியே முழு நாவலும் அமைந்து உள்ளது. இடையே சில திருப்பங்கள் வருகின்றன.
இளைஞனின் நல்ல மனம், விவசாயத்தை விரும்பும் அவன் செயல்பாடு எல்லாம் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், வேலையில் இருந்தால் தான் பெண் கிடைக்கும் என்று சொல்கின்றனர் பெற்றோர். இது போன்ற நடைமுறை உண்மைகளை வெளிப்படுத்துகிறது.
கடைசியில் விருப்பப்பட்ட பெண்ணை மனைவியாக்குவதாக முடிகிறது. மனம் போல் மாங்கல்யம் என நிறைவான கதை.
– சீத்தலைச் சாத்தன்