ஜைன மாமுனிவர் உபேந்திராசாரியாரின் ஜினேந்திர மாலை செய்யுள்களுக்கு விளக்கம் தரும் நுால். ஒருவன் ஜனன காலத்தில் உதயமாகும் லக்கனத்தையும், அக்காலத்தில் உள்ள கிரக நிலையையும் கொண்டு ஜாதகம் அமைத்து, அதன் வாயிலாக வாழ்நாளில் நிகழும் சுப, அசுபங்களை பற்றி சொல்கிறது.
பொருள் நஷ்டமானால் எந்த வழியில் ஏற்பட்டது என கண்டறிவது, களவு போன பொருளை கண்டறிய பிரச்னம் சொல்லும் முறை, அதை அடைவதற்கு உரிய முறை; காதல், கல்யாணம் பிரச்னைகளுக்கு தீர்வு போன்றவற்றை உரைக்கிறது.
ஐம்புலங்களின் வழியே அறிவை உணர்தல்; பலன், பரிகாரம், சகுனம், மகப்பேறு, மழை வரவு, யாத்திரை பற்றி, 23 காண்டங்களில் விரிவாக எளிய நடையில் கூறப்பட்டுள்ளது. சோதிடர்களுக்கும், சோதிடம் கற்போருக்கும் பயனுள்ள நுால்.
– புலவர் சு.மதியழகன்