நீண்ட ஆயுள், குழந்தைப்பேறு, செல்வம், அறிவு பலம், ஆரோக்கியம் வேண்டும் என்ற விருப்பத்தின் அடிப்படையில் அமைந்தவையே சடங்குகள் என விளக்கும் நுால். சடங்குகள் தண்ணீர், நெருப்பு, திசை என்ற அமைப்பில் நடத்த பெறுவன. இதற்கான முழு விளக்கத்தையும் எழுதியுள்ளனர்.
பெண் மாதவிலக்கான நான்கு நாட்கள் கழித்து வரும் இரவுகள் தான் கருக்கொள்ளுவதற்கு தக்க காலம் என்பதை, ஆபஸ்தம்பர் போன்ற மத சட்ட வல்லுனர்கள் சொல்லியுள்ளனர். எட்டாவது நாள் கருக்கொள்ளும் குழந்தை, செல்வத்துடன் வாழும் என்றும், 10வது நாள் கருக்கொள்ளும் குழந்தை புத்திசாலி என்றும் பட்டியலிடப்பட்டு உள்ளது.
வளைகாப்பு பெண்ணுக்கு மகிழ்ச்சி தருவது; வயிற்றில் உள்ள குழந்தையின் மனம் சம்பந்தப்பட்டது என்பதை தெளிவாகச் சொல்கிறது. அறிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் நிறைய உள்ள நுால்.
– சீத்தலைச் சாத்தன்