பூலித்தேவன், கட்டபொம்மன், மருது சகோதரர்கள், வாஞ்சிநாதன் எனத் துவங்கி, சுதந்திரத்திற்காக இன்னுயிரைத் தியாகம் செய்த தலைவர்களை நினைவுகூரும் நுால். சுதந்திரத்திற்காகப் பாடுபட்ட மிக மிக முக்கியமானவர்கள் என, 50 பேரை பதிவு செய்கிறது. பல்வேறுபட்ட இனம், மொழி, மதம், கலாசாரம் கொண்டுள்ள இந்தியர் என்ற ஒரே உணர்வோடு இருக்கும் இந்நாட்டில், இளைய தலைமுறையினருக்கு தேசிய உணர்வை ஊட்டுவதாக அமைந்துள்ளது.
சுதந்திரம் சும்மா கிடைக்கவில்லை, நீண்ட போராட்டத்திற்குப்பின் கிடைத்தது என்பதையும், எண்ணற்ற மக்களின் தியாகத்தையும் வலியுறுத்துகிறது. இந்திய சுதந்திர வரலாற்றை இளைஞர்களுக்கு உணர்த்தும் பயனுள்ள நுால்.
– முனைவர் இரா.பன்னிருகைவடிவேலன்