மத்திய அரசு கொண்டு வந்த மூன்று புதிய வேளாண் சட்டங்களை விமர்சித்து, விரிவான விளக்கங்களை பதிவு செய்துள்ள நுால். புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து, டில்லியில் விவசாயிகள் நடத்திய போராட்டம் குறித்து விரிவாக தகவல்களை தந்து உள்ளது.
போராட்டத்தின் துவக்கம், போலீசாரின் தாக்கு, அதை மீறிய பயணம் என போராட்டம் தொடர்ந்ததை கூறுகிறது. போராட்டத்தின் போது அரசு, விவசாயிகளுடன் நடத்திய பேச்சு, தமிழகத்தில் பரவிய விதம் பற்றி எல்லாம் கூறப்பட்டுள்ளது.
நிறைவாக, அவசர காலத்தில் சட்டங்களைக் கொண்டு வந்ததற்கான காரணங்கள் சிலவற்றையும் கூறப்பட்டுள்ளது. மக்கள் விரும்பாத சட்டங்களை திணிப்பது அடக்குமுறை என்றும் கண்டித்துள்ளார். போராட்ட படங்களையும் நுாலில் உரிய இடங்களில் இணைத்துள்ளது சிறப்பு. சமகாலத்தில் நடந்த நிகழ்வை பதிவு செய்துள்ள நுால்.
– முகில் குமரன்