மருத்துவராக விரும்பும் மாணவர்கள் திறன்களை எவ்வாறு வளர்த்துக் கொள்ள வேண்டும் என்பது பற்றி ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ள நுால். கடின முயற்சியால் தகுதிபடுத்திக் கொள்ள முடியும் என நம்பிக்கை ஊட்டுகிறது. அர்ப்பணிப்பு, நேர்மையுடனும், கருணையுடனும், மனித நேயம் கொண்டு ஏழை எளியவரிடம் இரக்கம் கொண்ட, 10 மருத்துவர்கள் பற்றி விளக்கியுள்ளார்.
முதுகலை மருத்துவப் படிப்பின் போது பேராசிரியராக, கண்டிப்பும் கடுமையும் காட்டியவர், நேர்மையுடனும் கருணையின் உச்சமாகவும் நடந்து கொண்டதை பதிவு செய்துள்ளார். மருத்துவ கட்டணம் 10 ரூபாய் என நிர்ணயித்து, மருத்துவமனை துவங்கிய மருத்துவர் பற்றியும் இதில் பதிவு செய்துள்ளார்.
மருத்துவப் பணியை புனிதமாக போற்றியவர்களை முன்மாதிரியாகக் கொண்டு சாமானியர்களுக்கு தொண்டாற்ற வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ள நுால்.
– புலவர் சு.மதியழகன்