நிருபராக பணியாற்றிய காலத்தில் ஏற்பட்ட அனுபவங்களை, 19 தலைப்புகளில் தொகுத்து தரும் நுால். குறிப்பாக, 2004ல் புரட்டிப் போட்ட ‘சுனாமி’ பேரலை குறித்த தகவல்களை பகிர்ந்துள்ளார். அதில், ‘சுனாமி’ என்பதற்கு பதிலாக, ‘தினமலர்’ நாளிதழ், ‘ஆழிப்பேரலை’ என்ற சொல்லைப்
பயன்படுத்தியது, கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளது.
கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்து, மற்றவர்களை மகிழ்ச்சிப்படுத்திய தகவலையும் குறிப்பிட்டுள்ளார். பத்திரிகையாளர்களுக்கு பிரபல கர்நாடக இசைப்பாடகி எம்.எஸ்.சுப்புலட்சுமி உதவியது உட்பட பல அரசியல் நிகழ்வுகள் பகிரப்பட்டு உள்ளன.
அமெரிக்காவில் இந்திய சுதந்திர தினவிழா கொண்டாட்டம் பற்றிய செய்திகளும் உள்ளன. நாளிதழ்களில் பணியாற்றிய அனுபவத்தையும், நாணயவியல் அறிஞர் முனைவர் இரா.கிருஷ்ணமூர்த்தியின் நாணயவியல் ஆய்வுகள் குறித்தும், அவரது பெருந்தன்மைகள் குறித்தும் விரிவாகக் கூறப்பட்டுள்ளது.
– முகில்குமரன்