குமரகுருபரரின் நீதிநெறி விளக்கப் பாடல்களையும், குமரகிரி வேமனரெட்டியின் தெலுங்கு மொழியில் அமைந்த நீதிப் பாடல்களையும் ஒப்பாய்வு செய்துள்ள நுால்.
இரு அறிஞர்களும் காலத்தால் ஒரே நுாற்றாண்டில் வாழ்ந்தவர்கள். இவர்கள் வெளிப்படுத்தும் கருத்துகளின் அடிப்படையில் ஒன்றுபட்டும், வெளியிடும் முறையில் வேறுபட்டும் இருப்பதை உதாரணங்கள் வழியாக வெளிப்படுத்துகிறது. இருவரும் ஒரே கடவுள் நெறியுடையவர்கள். குமரகுருபரரோ வாழ்வின் துவக்கம் முதல் இறுதி வரை சைவத் துறவியாக வாழ்ந்தவர்.
வேமனரோ இல்லறத்தில் ஈடுபட்டு பின்னர் துறவியானவர். துவக்கத்தில் வீர சைவராக விளங்கி அத்வைத நெறியைப் பின்பற்றியவர். கல்வியின் இன்றியமையாமையை விரிவாகக் குமரகுருபரர் கூற, வேமனரோ சுருக்கமாக விளக்கி உள்ளதை தெரிவிக்கிறது. தமிழ் நீதி நுால்களோடு பிற மொழியிலமைந்த நுால்களையும் ஒப்பாய்வு செய்ய துாண்டும் நுால்.
– புலவர் சு.மதியழகன்