‘தினமலர்’ நாளிதழ் வாரமலர் சிறுகதைப் போட்டியில் ஆறுதல் பரிசு பெற்ற கதைகளும், அவற்றை பாராட்டி எழுதப்பட்டுள்ள, 25 வாசகர் கருத்துகளையும் இணைத்துள்ள நுால். தற்கொலை எண்ணம் வருகிறவர்கள் அவசியம் படிக்க வேண்டும். மருத்துவப் படிப்பில் இடம் கிடைக்கவில்லை என்று தற்கொலை செய்வதை காட்டிலும், மற்றவர்களை மருத்துவராக்கப் பாடுபட வேண்டும் என்ற அருமையான கருத்தை பதிவு செய்துள்ளது.
நுாறு வயதை தாண்டி வாழும் அம்மா, 75 வயதை கடந்து வாழும் மகன், இதில் யார் முந்தினாலும் அடுத்தவருக்கு சிரமம். இருவரும் ஒன்றாக போய்விட்டால் என்ன என்று நினைத்த மகனின் மன மாற்றம், கனகாபிஷேகம் செய்ய வேண்டிய கதைக்கருவாக உள்ளது. பல்லி ஒன்று கரப்பானை கவ்வும் காட்சி, நிமிடத்துக்கு நிமிடம் சஸ்பென்ஸை கூட்டும் வகையில் உள்ளது. அற்புதப் படைப்பு; படிக்க வேண்டிய கதைகளின் தொகுப்பு.
– சீத்தலைச் சாத்தன்