தங்கைக்கு கெட்டி மேளம் கொட்டி திருமணம் முடிக்கத் துடிக்கும் அண்ணனின் எண்ணமும், அதில் ஏற்படும் சிக்கல்களையும் நாடகம் வாயிலாக தெரிவிக்கும் நுால்.
நாடகத்தின் கதை சுருக்கத்தை காண்போம். முருகன் என்பவன் பிரபல கம்பெனியில் லாரி டிரைவராக பணிபுரிகிறான். இவன் தங்கை லட்சுமி வெகுளிப் பெண். மனைவி அன்னம் ஏழ்மையிலே சுகம் காணும் உத்தமி; கணவனையே தெய்வமாகத் தொழுபவள்.
முருகனின் முதலாளி பணக்காரர் மட்டுமல்ல, சீர்திருத்தவாதியும் கூட... சொல்வதோடு நின்று விடாமல் கலப்பு மணத்தை வாழ்க்கையில் மேற்கொண்ட மேதை. கம்பெனியில் பிசினஸ் பார்ட்னர் ரேணுகாவை மணந்து கொள்ள வேண்டும் என்ற வெறியில் வளைய வரும்போது... விதி சிரித்தது. விளைவு, முருகனுடைய குடும்ப வாழ்வில் புயல் புகுந்தது. இது பற்றிய சுவாரசியமான நாடக நுால்.
– வி.விஷ்வா