மஹாபாரதத்தில் வீரம், மேன்மை, நன்றியுணர்வு, கீழ்படிதல் போன்ற குணங்களைக் கொண்ட கர்ணனை பற்றிய நுால். குந்தி வந்தாள்; பாண்டவர்கள் உன் சகோதரர்கள் என்றாள். ஆனால், ஊர் அறிய சொல்லவில்லை. பாண்டு ஒரு நோயாளி. பின்னர் இந்த மந்திரம் குந்திக்கு தேவைப்படும் என்பதை உணர்ந்தே, அந்த மந்திரத்தை முனிவர் கொடுத்திருந்தார். ஆனால், குந்தியோ இந்த
விஷயத்தில் கொஞ்சம் அவசரப்பட்டு விட்டாள்.
மந்திரத்தை ஒரு தடவை சோதித்துப் பார்க்க விரும்பி உச்சரித்த அவள், சூரிய தேவனையும் மனதுக்குள் நினைத்தாள். சூரிய தேவன் வந்தான்; பிள்ளை வரம் தந்தான். ஆண் குழந்தை கவச குண்டலத்தோடு பிறந்தது.
இது போன்ற எளிய சொற்களில் கர்ணனை பதிவு செய்கிறது. பிறப்பு, வளர்ப்பு, கல்வி, போர் கலை கற்றல், திருமணம், போர், இறப்பு என கர்ணனின் முழு பதிவுகளை மிக எளிமையாக படைத்துள்ளது.
– முனைவர் இரா.பன்னிருகைவடிவேலன்