லண்டன் இளைஞர், தமிழக கோவில்களில் யாளி சிலைகள் பற்றிய தேடலுடன் திரிவதாக கூறும் நாவல். முப்பாட்டன் குறிப்பின்படி, யாளி உயிரோடு இருக்கிறது என உணர்கிறார் பெக்மென். வழிகாட்டி உதவியுடன், சென்னை துவங்கி கன்னியாகுமரி வரை கோவில்களில் யாளியை தேடுகிறார். களக்காடு, திருஅழகர்குடி கோவிலில் யாளி இருப்பதை கண்டுபிடிக்கிறார்.
ஆனால், ஒரு குடும்பம், யாளி இருப்பதை மறைத்து, கோவிலை நிர்வாகம் செய்வது தெரிகிறது. இந்த குடும்பத்திற்கு தெரியாமல், பெக்மென் எப்படி யாளி சிலைகளை பார்த்தார்... இதற்கு ரகசிய நீர்வழி பாதையை எப்படி கண்டுபிடித்தார் என்பதை சுவாரசியமாக விவரிக்கிறது.
கோவில் நிர்வாகியின் மகள், பெக்மெனை ஒரு தலையாக காதலித்து வெற்றி கண்டாளா என்ற கேள்விக்கு விடை சொல்கிறது. சிறுவர்களை மனதில் வைத்து எழுதப்பட்ட நாவலில், கோவில் துாண்களில் காணப்படும் யாளி சிலைகளை நினைவூட்டுகிறது.
–
டி.எஸ்.ராயன்