பல்வேறு தலைப்புகள் கொண்ட கவிதைகளின் தொகுப்பு நுால். பாசம், காதல், நட்பு, கல்வி, சமத்துவம், இயற்கை, நாட்டுப்பற்று போன்ற இயல்புகளை கவிநயத்தோடு வர்ணிக்கிறது.
வாழ்க்கையின் ஏற்ற, இறக்கத்தை, ‘எங்கே சிரிப்பது... எங்கே அழுவது...’ என அழகாய் உணர வைக்கிறது. காதல் வேரின் ஆழத்தை, ‘காதலின் ஆழம்’ கவிதை மழையாக பொழிகிறது.
வாழ்வின் ஏற்ற தாழ்வுகளை பற்றி, ‘கடவுள் ஏன் கல்லானான்’ கவிதை சிந்திக்க துாண்டுகிறது.
தந்தை, மகள் பாசத்தை பாடல் வரிகளால் வர்ணிக்கிறது. கண்ணதாசனின் பாடல் வரிகளை நினைவூட்டும் நுால்.
–
டி.எஸ்.ராயன்