மனமும் உடலும் புண்பட்டு கிடக்கும் போது, கதை சொன்னால் பிடிக்கும் தானே... அதைத் தான் சிவா செய்து கொண்டிருக்கிறான். வேண்டாமென்று உதறிய காதலி குண்டடிபட்டு கிடக்கும் போதும், பழைய அன்பு மாறாமல் பாதுகாக்கிறான் சிவா. அந்த காதல் தானே பக்தி. இதுவும் ஒரு வகையில் ஆத்திகம் பேசும் அன்பு தான்.
தட்டை வீசி எறியும் கதாநாயகியை, கோபத்தில் சீண்டாமல் அன்புடன் அரவணைப்பது தானே கடவுள். தலைப்பாகை போய்விட்டதே என அவள் கதறியழுது கடவுளை திட்டிக் கொண்டிருக்கும் போது, போனது தலைப்பாகை தான்... தலை இல்லையே என்று கடவுளின் பக்கம் மடைமாற்றுகிறது. புத்தகத்தை எடுத்ததும் தெரியாது... படித்து முடித்ததும் தெரியாது. அப்படி ஒரு மாஜிக்.
–
எம்.எம்.ஜெ.,