நாடு, மொழி, இனம், பண்பாடு, அரசியல் சூழல், சமூகச் சீர்திருத்தம் குறித்து திராவிட இயக்க முன்னணிக் கவிஞர்கள் வெளிப்படுத்திய கருத்தோட்டங்களைப் பல்வேறு கல்வியாளர்கள், ஆய்வாளர்கள் கூர்மையாக ஆய்ந்து பதிவு செய்துள்ள நுால்.
திராவிட இயக்கத்தின் கோட்பாடுகளான சமூக நீதி, சமத்துவம், தன்மானம், மனித உரிமை, அரசியல் பங்கேற்பு, பெண் விடுதலை, பொருளாதார மேம்பாடு, இட ஒதுக்கீடு, தமிழ்த் தேசியம் போன்றவற்றுக்கான விளக்கத்தையும், சென்ற நுாற்றாண்டின் சமூகச் சூழலையும் படம் பிடித்துக் காட்டுகின்றன.
முதலாளித்துவ எதிர்ப்பு, மொழிப்பற்று, மத நல்லிணக்கம், மகளிர் மேம்பாடு, மறுமண ஆதரவு சிந்தனைகளை கொண்டுள்ள நுால்.
–
கவிஞர் மெய்ஞானி பிரபாகரபாபு