காவலை மீறி சிவனை தரிசித்த சிறுவனின் ஆன்மிக பேராண்மையை விளக்கும் கதை. சிவனே என்று கண் மூடி கும்பிட்டால் தஞ்சை ராஜராஜேஸ்வரன் கட்டிய பெருவுடையார் கண்முன் தோன்றும்.
தஞ்சை கோவில் பக்கமே தலைவைத்து படுக்க முடியாத ஒரு தலைமுறைக்கு ஈசனை எப்படி கற்பனை செய்து பார்க்க முடியும். ஈசன் எப்படி இருப்பான் என்பது 15 வயது மதுரனுக்கு சிந்னை. படையெடுப்பு பேரழிவு காலத்தில் பூஜையின்றி புல்லுருவிகள் புழங்கும் இடமாக மாறியது கோவில்.
இந்த கதையை படிக்கும் போதே கண்ணீர் வழிவதை தடுக்க முடியாது. ஆன்மிக உணர்வை பரவவிட்டு ஒன்றே ஜீவனாய் வாழும் மதுரனோடு ஒன்றச் செய்த ஆசிரியரின் எழுத்துக்கு ஆயிரம் கோடி நமஸ்காரம்.
இறைவனோடு வாழும் அதிசயம் புத்தகத்தின் வழியே நடப்பது உண்மை. ‘தி ஜங்கிள் புக்’ பயணப்பாதையை விட மிகக் கடினமான, கொடுமையான வீரர்களைத் தாண்டி ஈசனை தொட்டு ஆனந்தித்த அனுபவம் மேன்மையானது.
–
எம்.எம்.ஜெ.