அறிவை பட்டை தீட்ட உதவும் கணக்குகள் கொண்ட நுால். விடைகளும் கொடுக்கப் பட்டுள்ளதால் கண்டுபிடித்தது சரிதானா என்பதை பார்த்து புரிந்து கொள்ள முடிகிறது. மாதிரிக்கு ஒரு கணக்கு. 60 பயணியர் ஒரு பேருந்தில் உள்ளனர். அந்த பேருந்து, ஐந்து நிறுத்தங்களில் நின்று செல்லும். முதல் நிறுத்தத்தில் 15 பேர் இறங்க, இரண்டாவது நிறுத்தத்தில் மூன்று பேர் இறங்கினர்.
மூன்றாவது நிறுத்தத்தில் பயணியரில் பாதி பேர் இறங்கினர். நான்காவது நிறுத்தத்தில் 10 பேர் ஏறினால், கடைசி நிறுத்தத்தில் எத்தனை பேர் இறங்குவர். மனக்கணக்காகவே போடத் தெரிந்தால் வெற்றியாளர் தான். சுலபமான கணக்கு தான். ஆனால், சிந்திக்கும் முறையை சொல்லிக் கொடுக்கும் புதிர்கள், சிறுவர்களுக்கு மிகவும் பயன் தரும்.
–
சீத்தலைச் சாத்தன்