சூழ்நிலைக்கு தகுந்தார் போல் பேசத் தெரிந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி பற்றிய நுால். ராமாயண விழா கட்சியின் போது முன்னாள் அமைச்சர் ரகுமான்கான் மேடையில் இருந்தார்.
அப்போது, ‘ரகுமான்கான் இல்லையென்றால் ராமாயணமே உருவாகி இருக்காது’ என்றார் கருணாநிதி. ரகு மானை கானகத்தில் துரத்தியதால் தான் ராவணன், சீதையை சிறை பிடித்தான். ரகு என்றால் ராமன். அவன் துரத்தியது மான். அந்தமான் இருந்த இடம் கானகம். சமயம் அறிந்த பேச்சு. சபை அறிந்த பேச்சு.
சட்டசபையில் ஒரு உறுப்பினரின் கேள்வி, முதல்வரை நோக்கி, ‘மதுவிலக்கு கொள்கையில் மாற்றம் உண்டா’ என இருந்தது. ‘இப்போதைக்கு மாறுதலே இல்லை’ என்ற சிலேடை மொழியில் சிலம்பம், வார்த்தை விளையாட்டாக வந்தது. படித்து ரசித்து சுவைக்க ஏற்ற நுால்.
–
சீத்தலைச் சாத்தன்