வாழ்க்கையில் வெற்றி எண்ணக் கருத்தை மையமாகக் கொண்ட நுால். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் என்ற நேர்முகச் சிந்தனையை அடிப்படையாக கொண்டு வாழ்வில் முன்னேற வழி கூறுகிறது. 100 தலைப்புகளில் நல்ல கருத்துகளை வழங்கியிருக்கிறது.
யார் நம் மீது நிறையும் குறையும் கூறுகின்றனரோ அவற்றை எண்ணிப் பார்த்துத் திருத்திக்கொள்ளும் சூழலை உருவாக்கிக் கொண்டால், வாழ்க்கை இனிதாக இருக்கும். காலம் தாழ்த்துவது, மறதி, சோம்பல், அதிக உறக்கம், கோபம் போன்றவற்றை விரட்டினால் வாழ்க்கைப் பாதை இனிதாகும் என்கிறது.
கற்றவற்றைப் பிறருக்குக் கற்பி என்பதை மனதில் நிறுத்தினால் அந்த நாள் புனிதமாகும் என்று கூறுகிறது. ஆற்றலை வளர்த்தால் வானமும் வசப்படும். அதற்குத் தன்னம்பிக்கையும், விடாமுயற்சியும் அவசியம் என்ற கருத்து, பல கோணங்களில் சிந்தித்து எழுதப்பட்டுள்ளது.
–
ராம.குருநாதன்