தியான முறைகளை தெளிவாக வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ள நுால். தியானம் பற்றிய அறிமுகத்தோடு, தியானத்தின் முறைகள், அதன் பலன்கள், தியானத்திற்கு ஏற்படும் தடைகள், அதை எதிர்கொள்வது எப்படி என்பது போன்ற தகவல்கள் தொகுத்துத் தரப்பட்டுள்ளன. தியானம் பற்றி அறிய ஆர்வம் கொண்டவர்களுக்கான சிறந்த வழிகாட்டியாக அமையும்.
தியானம் பற்றி அறிஞர்களின் கருத்துகளும், அறிவுரைகளும் உள்ளன. தியானத்தில் வெற்றியடைய பொறுமையும், விடாமுயற்சியும், தன்னம்பிக்கையும் அவசியம் என்கிறது. அமைதியான மனம், நல்ல கவனிப்புத்திறன், கருத்துகளில் தெளிவு, தகவல் தொடர்பு மேம்பாடு, திறமைகள் வளர்த்தல், அசைக்க முடியாத உள்திடம், புத்துணர்வு பெறுதல், நல்லதிர்ஷ்டம் அனைத்தும் ஒழுங்கான சீரான தியான வழிகள் என குறிப்பிடும் நுால்.
– விஷ்வா