புவியின் இயக்கத்தையும், உயிரினங்களின் முக்கியத்துவத்தையும் எடுத்துரைக்கும் நுால். பல்லுயிரினங்களால் ஏற்படும் சூழலின் சிறப்பு குறித்து உணர்த்துகிறது. காட்டில் வாழும், 30 உயிரினங்கள் குறித்து கட்டுரைகள் உள்ளன. கம்பீர விலங்கான சிங்கத்தில் துவங்கி, பரவசப்படுத்தும் மஞ்சள் மூக்கு நாரையுடன் முடிகிறது. ஒவ்வொரு உயிரினத்தின் இயல்பையும் விளக்கி, சூழலியலில் அவற்றின் முக்கியத்துவம் பற்றி குறிப்பிடுகிறது.
உயிரினங்களின் சிறப்பியல்புகள் குறித்த தகவல்களும் உள்ளன. புத்தகத்தை எழுதியது வன அதிகாரி என்பதால், உறுதிப்படுத்தப்பட்ட நுட்ப தகவல்களைக் கொண்டுள்ளது. மனிதனின் இயல்புக்கு மாறான பேராசையால், பூவுலகுக்கு ஏற்பட்டுள்ள இடர் குறித்து எச்சரிக்கிறது.
எல்லா வகை உயிரினங்களின் இயல்புகள் பற்றி எழுதப்பட்டுள்ளதால், உயிர்க்கோளம் பற்றி புரிந்து கொள்ள ஏதுவாக அமையும். காட்டை பாதுகாக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை உணர்த்தும் அறிவு நுால்.
–
அமுதன்