விசித்திரம் நிறைந்த மனதின் மீறல்களை எடுத்துரைக்கும் நாவல். உள் மனதில் உறைந்துள்ள அவதியை வெளிப்படுத்துகிறது.
நாவல் நிகழ்வுகள் கொரோனா தொற்று காலத்தில் நடப்பதாக காட்டப்பட்டுள்ளது. அந்த நோய் காலத்தில் ஏற்பட்டிருந்த தீவிரத்தையும் கதைக்களம் பேசுகிறது. பய உணர்வின் தாக்கத்தையும் வெளிப்படுத்துகிறது. நாவலுக்கு, 12 சிறிய தலைப்புகளில் அத்தியாயங்கள் பிரித்து அமைக்கப்பட்டுள்ளதால் சுலபமாக வாசிக்க இதம் தருகிறது.
ஒவ்வொரு அத்தியாயமும் ஒரு சிறுகதை போல் அமைந்துள்ளது. எளிதாக அணுக துணை புரியும் வண்ணம் உள்ளது. மனநலம் சார்ந்த கருத்தை பொதிந்து எழுதப்பட்டுள்ளது. உரையாடல்கள் வழியாக பெரும்பாலும் கதை நகர்கிறது. மனதின் மீதான புரிதலை உண்டாக்க முயலும் நாவல்.
–
ராம்