திருவாரூர் மாவட்டத்தில், 47 திருக்கோவில்கள் பற்றிய தகவல்களை திரட்டித் தரும் நுால். வடுவூர் கோதண்டராமர் கோவில் வரலாற்றைக் கதை போல் தெளிவுபடுத்துகிறது. கண்ணபுரத்தில் இருந்த கோதண்டராமர் சிலையை, தஞ்சையை ஆண்ட மன்னர் எடுத்து வந்து திருக்கோவில் அமைத்து வழிபாடு நடத்தினார்.
இந்த வரலாற்றுடன் தண்டகாரண்ய முனிவர்களையும் இணைத்து சிறப்பாக அமைத்து உள்ளார். திருக்கோவில்களை வணங்கி அருள் பெற விரும்புவோர் ஒரு கையேடாக வைத்துக் கொள்ளலாம். எல்லாரையும் கவரும் நுால்.