ஆன்மிகம், அறிவியல் இரண்டுமே வாழ்வின் அத்தியாவசிய தேவை. அவற்றில் முந்தியது ஆன்மிகம் என சான்றுகளுடன் நிறுவும் நுால். சூரிய வணக்கம் போற்றப்பட்ட காரணத்தை, ஆரோக்கியத்தின் அடிப்படை என்கிறது ஆன்மிகம். அதே காரணத்தை, சூரிய ஒளி உடம்புக்கு வைட்டமின் சத்து தருகிறது என அறிவியலும் சொல்கிறது. வெளியில் சென்று திரும்பும் போது குதிகால் நனையும் படி கழுவ வேண்டும் என்று சொல்கிறது ஆன்மிகம். குதிகால் நனைய நீர் படாவிட்டால் நரம்பு சூடாகி மூளையை தாக்கும் என்கிறது அறிவியல்.
கர்ப்பிணிக்கு ஏழாம் மாதம் வளைகாப்பு நடத்துவது தாய்க்கும், கருவில் இருக்கும் குழந்தைக்கும் குதுாகலம் தரும் என்பது ஆன்மிகம். தாயின் மகிழ்ச்சி தான் குழந்தைக்கு ஊட்டச்சத்து என்று சொல்கிறது அறிவியல். ஆன்மிகத்தை வளப்படுத்தியதே அறிவியல் தான் என உரைக்கும் நுால்.
–
சீத்தலைச்சாத்தன்