காதல் கதை என்று ஆரம்பிக்கப்பட்டாலும் மனித உணர்வுகளை சொல்லுகிற கதை. அப்பா, மகன் உறவு வெகு யதார்த்தமாக சொல்லப்பட்ட விஷயம். இன்றைக்கு மட்டுமல்ல... எந்த தலைமுறையாக இருந்தாலும் தந்தை, மகன் பிரச்னைக்கு தீர்வு கிடையாது என்பதை அவர்களது வார்த்தைகள் விவரிப்பது சுவையான உணர்வு.
எழுத்தாளரான வங்கி குமாஸ்தா கனவில் காதல் வருகிறது. அந்த காதல் உடையும் நேரத்தில் மனோதத்துவ டாக்டர் சிகிச்சை அளிக்கிறார். அவரும் வெற்றியடைந்த தன் உண்மைக்காதலை பகிர்ந்து நம்பிக்கையூட்டுகிறார். அந்த நம்பிக்கை உண்மையாகிறதா என்பதை கதையை படித்து தெரிந்து கொள்ளலாம்.
ஓவர் ரொமான்ஸ், வழிசல் என்று சினிமா காதலாக இல்லாமல், நிஜக் காதலைப் போல மவுனத்தில் நிரம்பி வார்த்தைகளுக்கு திரையிட்டு வாழ்ந்து காட்டியிருக்கிறது. அனைவருமே படிக்க வேண்டிய குடும்பக் கதை.
-–
எம்.எம்.ஜெ.,