உயிர் பற்றிய கேள்வியை, மாறுபட்ட சிந்தனையுடன் வெளிப்படுத்தும் நுால். அறிவியல் ரீதியாக கருத்துக்களை தருகிறது. அனுபவப் பூர்வமாகவும் விளக்குகிறது. உயிர் எங்கே செல்கிறது என்ற கேள்வியை முன் வைத்து முதல் அத்தியாயம் துவங்குகிறது. அதற்கான விடையை விஞ்ஞான ரீதியாக விளக்க முற்படுகிறது. பல கேள்விகளை எழுப்புகிறது. சிந்திக்கத் துாண்டுகிறது. உயிர் பிரிவதற்கான காரணத்தை விளக்குகிறது.
உயிரின் ஆட்ட அனுபவங்கள் பலவற்றை பதிவு செய்துள்ளது. சிந்தனையை துாண்டும் வகையில் அமைந்துள்ள நுால்.