ரத்தம் பற்றிய அறிவியல் உண்மைகளை விரிவாக எடுத்துரைக்கும் நுால். உயிரினங்களின் உடல் இயக்கத்துக்கு அதன் முக்கியத்துவத்தை விவரிக்கிறது. ரத்தத்தில் இத்தனை விஷயங்களா என்று வியக்க வைக்கும் தகவல்களை கொண்டுள்ளது.
ரத்தம் உருவாவது துவங்கி, உடல் உறுப்புகளில் அதன் செயல்பாடு, இடைவிடாத ஓட்டத்தின் முக்கியத்துவம் எல்லாம் தெளிவாக கூறப்பட்டுள்ளது. தகவல்கள் தனித்தனி பகுதிகளாக பிரித்து எளிதாக புரியும்படி தரப்பட்டுள்ளன. எளிய மொழி நடை, கடினமான பகுதிகளையும் அறிய துணை நிற்கிறது.
உடல் இயக்கம் பற்றிய விழிப்புணர்வை தருகிறது. பிறப்பு முதல் இறப்பு வரை ஒருவரின் ரத்த வகை மாறவே மாறாது என்ற உண்மையை தெளிவாக்குகிறது. ரத்த வகை மாதிரி, பயன்பாடு, செயல்பாடு போன்றவை விவரிக்கப்பட்டுள்ளன.
தேவையான பகுதிகளில் வண்ணப் படங்கள் தரப்பட்டுள்ளதால் புரிந்து கொள்ள ஏதுவாக உள்ளது. ரத்தம் பற்றிய நுட்பமான தகவல்களுடன் உடல் நலம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் அற்புத நுால்.
–
மலர்