கவிஞரும் எழுத்தாளருமாகிய மல்லிகாவின் சுயசரிதை நாட்குறிப்பேடு போல பதிவு செய்யப்பட்டுள்ள நுால். பள்ளி வாழ்க்கை, கல்லுாரி கனவு, குடும்ப வாழ்க்கையில் நடைபெற்ற நிகழ்வுகள் சுவாரசியமாக பதிவிடப்பட்டுள்ளன.
தன் பிள்ளைகள் கல்லுாரிகளில் பயில, அஞ்சல் வழிக் கல்வி பயிலரங்கம் நடைபெற்ற கல்லுாரிக்கு கணவருடன், முதுகலை படிப்பதற்குச் சென்ற இனிய நினைவுகள் சொல்லப்பட்டுள்ளன. பலர் ஊக்குவித்த தருணங்கள் சுட்டப்பட்டுள்ளன.
வாழ்வில் பல இடையூறுகளை, இன்னல்களை எதிர்கொண்ட போதும் அவற்றை புறந்தள்ளி, இறை நம்பிக்கையோடு திறமை, ஆற்றலை வளர்த்து எழுத்தாளராக உயர்ந்தது பற்றி எழுதப்பட்டுள்ளது.
வாழ்வில் பெற்ற பல்வேறு விருது களும், சிறப்புகளும் பட்டியலிடப்பட்டுள்ளன. ஆற்றிய பல்வேறு சமூக பணிகளும், பயணித்த வெளிநாட்டு அனுபவங்களும் பதிவிடப்பட்டுள்ளன. வாழ்வில் முன்னேற பாடமாக விளங்கும் நுால்.
–
புலவர் சு.மதியழகன்