சிலப்பதிகார காவியத்தில் இளங்கோவடிகள் கவித்துவத்தோடு படைத்த முக்கிய மூன்று கதாபாத்திரங்களான கண்ணகி, கோவலன், மாதவியின் தனித்தன்மைகளை மீளாய்வு செய்து மூன்று பகுதிகளாகத் தொகுத்து தரப்பட்டுள்ள நுால்.
கண்ணகியின் குணங்களை முன்வைத்து, மண வாழ்வின் மீதான பிடிப்பு, வெளிப்படும் நற்குணங்கள், கோவலனுடனான உறவு, எதிர்கொண்ட துன்பங்கள் விவாதிக்கப்பட்டுள்ளன.
மாதவி பாத்திரத்தின் தன்மை, ஆடல் கலைத் தகவல்கள், கானல் வரியால் வரும் திருப்பம், மாதவியின் துறவு போன்றவை அலசப்பட்டுள்ளது. கோவலனின் கதைப்பாத்திரத்தை எடுத்து, கோவலனின் மாதவியுடனான உறவு, பொருளிழந்த தவிப்பு, வணிகம் செய்யும் முனைப்பு, கொலையாதல் போன்றவை மாறுபட்ட கோணத்தில் திறனாய்வு செய்யப்பட்டுள்ளது.
இளங்கோவடிகளின் காட்சியமைப்பு, உவமை நயங்கள், கவித்துவம், சொற்செட்டு, புலமைத்திறம் நுணுக்கமாக விவரிக்கப்பட்டுள்ளது.
–
கவிஞர் மெய்ஞானி பிரபாகரபாபு