தி.மு.க., முன்னாள் எம்.பி., ஜின்னாவின் வாழ்க்கை வரலாற்றை விளக்கும் நுால். வாழ்வில் முன்னேற அவரது மூத்த சகோதரர் உதவியது குறித்தும் நுாலில் பேசப்பட்டுள்ளது.
பள்ளிப் படிப்பு பற்றி சுவாரசியமான தகவல்கள் உள்ளன. சென்னை, புதுக்கல்லுாரியில் சேர்ந்தது, தி.மு.க., பிரமுகர்களுடன் ஏற்பட்ட நட்பு, சென்னை லயோலா கல்லுாரியில் படித்தது குறித்த தகவல் உள்ளது. பாவேந்தர் பாரதிதாசனை கல்லுாரி விழாவிற்கு அழைத்து பேச வைத்த நிகழ்வுகளும் பகிரப்பட்டு உள்ளன.
பெருந்தலைவர் காமராஜர், மூதறிஞர் ராஜாஜியை சந்தித்த நினைவுகள், சட்டக் கல்லுாரியில் படித்த போது, மாணவர் பேரவையை துவக்க முன்னாள் முதல்வர் கருணாநிதியை அழைத்தது போன்ற தகவல்களும் உள்ளன.
இறுதியில் ஜின்னாவின் குடும்பம் குறித்து விரிவாக பேசப்பட்டுள்ளது. தேவையான இடங்களில் அழகான வண்ணப் படங்களும் இடம்பெற்று உள்ளன.
–
முகில் குமரன்