பிள்ளைகளால் பிரச்னையா, பிள்ளைகளே பிரச்னையா என்ற பொருளில் அமைந்து உள்ள நுால். கருத்தியல், பிரச்னை, பிள்ளைப்பருவ வரலாறு என முறையாக தொகுத்து தரப்பட்டு உள்ளது. துவக்க கால மனித வாழ்வையும், அதில் தாய் – பிள்ளை உறவுக்கான மதிப்பையும், இது எப்படி வளர்கிறது, தற்போது எப்படி இருக்கிறது என்பதையும் கருத்தியம் விளக்குகிறது.
பிரச்னை என்ற தலைப்பில் கணவன் – மனைவி எப்படி இருக்க வேண்டும், மனைவி கருவுற்றால் எப்படிப் பாதுகாக்க வேண்டும், பிள்ளைகள் பிறந்ததும் என்னென்ன பிரச்னை உண்டாகும் என வாழ்வில் ஏற்படும் பல நிகழ்வுகளை எதிர்கொள்ள தீர்வளிக்கிறது.
பணம், பதவி, புகழுக்காக போராடுபவர்கள், பிள்ளைகளுக்கு அன்புக்காகவும், பண்புக்காகவும், நீதிக்காகவும் போராடக் கற்றுக்கொடுக்க வேண்டும் என்கிறது. பெற்றோருக்கு மட்டுமல்ல, திருமண வயதுடையோருக்கும் பயன் தரும் நுால்.
– முனைவர் இரா.பன்னிருகைவடிவேலன்