கடல் வாழ்க்கை அற்புதங்கள், சாகசங்கள், கடலுக்கு இரையாகும் மீனவர் வாழ்வை விவரிக்கும் கவிதை தொகுப்பு. எல்லை தாண்டும் மீனவர்களையும், இலங்கை கடற்படையின் கோர முகத்தையும் கண்ணீர் மல்க பேசுகிறது. புயலால் படும் துயரங்கள், உதவாத செயற்கைக்கோள், நிவாரணம் என்ற பெயரில் நடக்கும் பஞ்சாயத்து போக்குகளை அலசுகிறது.
மீன் வளம் காக்க, கடலோர மேலாண்மை சட்டத்தை கடைப்பிடிக்க வேண்டிய அவசியத்தை பேசும் கவிதை கவிநயம். வித்தகக் கடலை விளைநிலமாக கொண்டு கரையோரம் வாழும் போது, பேரலை கொடுக்கும் இரைச்சலை அச்சமாக்குகிறது.
கரைக்கு வரும் மீனை, விற்க ஓடும் பெண்களின் உழைப்பு; வலை உலர்த்தும் தந்தைக்கு உதவும் சிறுபிள்ளைகள், உறுதுணையாக மனைவியின் அக்கறையை பாராட்டும் விதம் கைகுலுக்க வைக்கிறது. கவிதை, நாவல் எழுத துடிப்போருக்கு உதவும் நுால்.
–
டி.எஸ்.ராயன்