நான்கரை ஆண்டுகள் தமிழகத்தின் முதல்வராக இருந்த பழனிசாமி பற்றி தெளிவாகவும், சுருக்கமாகவும் தெரிவிக்கும் நுால். சிலுவம்பாளையம் என்ற சிற்றுாரில் பிறந்தவர் எப்படி முதல்வராக முடிந்தது என்று விவரிக்கிறது. நம்மோடு எப்போதும் நான்கு பேர் இருக்க வேண்டும்.
அதனால் அவர்களுக்கு நாம் ஏதாவது உதவி செய்ய வேண்டும் என்ற அரசியல் பால பாடம் கட்சியில் கிளைச் செயலர் ஆக இருந்தபோது கற்றுக் கொண்டதால், ஜெயலலிதா அமைச்சரவையில் 20 ஆண்டு காலம் பொதுப்பணித் துறை அமைச்சராக தொடர முடிந்தது.
அடுத்த முதல்வர் என்று சசிகலா பெயரைச் சொல்லி, 124 எம்.எல்.ஏ.,க்கள் கையெழுத்திட்ட கடிதத்தை கவர்னரிடம் கொடுக்கச் சென்றவர் முதல்வரானது, எதிர்பாராத திக் திக் வரலாறு. குடும்பத்தாரை அரசியலில் அனுமதிக்க மாட்டேன் என்று சொன்னதை, செய்து காட்டியதை கூறுகிறது.
–
சீத்தலைச் சாத்தன்